அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி காங்., அரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி காங்., அரசின் வீழ்ச்சிக்கு, தலைமையின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள், அக்கட்சியில் நிலவிய கடுமையான கோஷ்டி பூசலே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.புதுச்சேரியில், 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., ஆட்சி பொறுப்பேற்றது. 30 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு, மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை
புதுச்சேரி காங்., அரசு, வீழ்ச்சி, காரணம் என்ன?

புதுச்சேரி; புதுச்சேரி காங்., அரசின் வீழ்ச்சிக்கு, தலைமையின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள், அக்கட்சியில் நிலவிய கடுமையான கோஷ்டி பூசலே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.


புதுச்சேரியில், 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., ஆட்சி பொறுப்பேற்றது. 30 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு, மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமித்துக் கொள்ளலாம்.


latest tamil news




மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, நியமன எம்.எல்.ஏ.,க்களை, மத்திய உள்துறை அறிவிப்பது வழக்கம். காங்., அரசு பதவியேற்று, ஓராண்டாகியும் நியமன எம்.எல்.ஏ.,க்களின் பெயரை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை.இதற்கு, காங்., கட்சியில் நிலவிய கோஷ்டி பூசலே காரணம். இதனால், 2017 ஜூலை மாதத்தில், பா.ஜ., தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை, மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்தது. அதிர்ச்சி அடைந்த காங்., தரப்பினர், கோர்ட்டிற்கு சென்றனர்.

இதில், நியமன எம்.எல்.ஏ.,க்களை, மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்பதுடன், அவர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையும் கிடைத்தது. இது, புதுச்சேரியில், பா.ஜ.,வின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.இந்நிலையில், காங்., கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், காங்., ஆட்சியை பறிகொடுத்து நிற்கிறது.எம்.எல்.ஏ.,க்களின் தொடர் ராஜினாமா பின்னணியில் பா.ஜ., இருப்பதாக காங்., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 'தேர்தலில், காங்., கட்சியில் சீட் அளிப்பதில் பின்பற்றப்படும் நடைமுறையே, தற்போதைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணம்' என, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:
பாரம்பரியமாக காங்., கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சி விசுவாசிகளுக்கும் சீட் தராமல், வெளியில் இருந்து வந்தவர்களுக்கே தந்தனர். தேர்தலில் செலவு செய்வரா என, பணத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து, வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கும் சீட் வழங்கினர். அவர்கள்தான் ராஜினாமா செய்து, வெளியேறி உள்ளனர்.

நான்கு முறை வெற்றி பெற்று, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த, லட்சுமிநாராயணன் போன்றவர்களை, சபாநாயகர் பதவிக்கு நியமிக்காமல், முதல் முறையாக வெற்றி பெற்ற, கட்சிக்கு புதிதாக வந்த, சிவக்கொழுந்துவுக்கு வழங்கியதால், அதிருப்தியில் இருந்த லட்சுமிநாராயணன், தற்போது வெளியேறிவிட்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


* ஜனாதிபதி ஏற்பு



நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா கடிதம், சட்டசபை நடவடிக்கைகள் குறித்த சட்டசபை செயலரின் அறிக்கை, கவர்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.அனைத்து கோப்புகளையும் ஜனாதிபதி பார்வைக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்தார். நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான, மத்திய உள்துறையின் அறிவிக்கை, புதுச்சேரி அரசிதழில், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


* கட்சிகள் 'கப்சிப்'



காங்., கட்சிக்கு அடுத்த, பெரிய கட்சியான, 7 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட என்.ஆர்.காங்., ஆட்சி அமைப்பதற்கு கவர்னரை சந்தித்து உரிமை கோரலாம்.ஆட்சி அமைப்பதில் ரங்கசாமிக்கு விருப்பம் இருந்தாலும், கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகே, ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் திட்டமாக இருக்கிறது.இதனால், ரங்கசாமி, நேற்று வரை, கவர்னரை சந்திக்கவில்லை; ஆட்சி அமைக்க உரிமையும் கோரவில்லை. இதனால், கவர்னரின் பரிந்துரையை ஏற்று, புதுச்சேரியில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் வாய்ப்பே, தற்போது பிரகாசமாக உள்ளது.


ஆட்சி கவிழ்ப்பு அசிங்கம் - நாராயணசாமி குற்றச்சாட்டு


சேலம், கன்னங்குறிச்சியில், காங்., பிரமுகர் இல்ல திருமண விழாவில் நேற்று, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புதுச்சேரியில், காங்., ஆட்சியை கவிழ்க்க, கிரண்பேடி மூலம், பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தொல்லைகள் கொடுக்கப்பட்டன. அனைத்தையும் கடந்து, வெற்றிகரமாக, ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். இதை, பொறுத்துக் கொள்ள முடியாத, பா.ஜ.,வினர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி, ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்துள்ளது அசிங்கமாக உள்ளது. இதன் சதியில், அ.தி.மு.க.,வும் உள்ளது வெட்கக்கேடு.மோடியை பார்த்து, எனக்கு ஒருபோதும் அச்சமில்லை. அவர், அவரது தாத்தாவையும் சந்திப்பேன். என்னைப் பற்றி, மோடிக்கு நன்றாக தெரியும். நான் ஊழல் செய்யாதவன். நாராயணசாமி ஊழல் செய்தார் என நிரூபிக்க முடியுமா?இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202116:52:36 IST Report Abuse
Malick Raja வீழ்ச்சிக்கு காரணம் தேர்தலில் வீழ்ச்சியடைபவர்கள் மூலம் வெளிப்படும் .. வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தேர்தலுக்கு பிறகு காணாமல் போவார்கள் ...
Rate this:
Cancel
24-பிப்-202112:33:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மோடியோட தாத்தாவை சந்திக்க மேலுலகம் செல்ல வேண்டும் நாராயணசாமி
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
24-பிப்-202111:28:36 IST Report Abuse
Raj வேறு என்ன? பிஜேபியிடம் சேர்ந்த ஊழல் பணம், ஆட்சியை பிடிக்க எந்த நிலைக்கும் போகும் பதவி வெறி, ஜனநாயகத்தை துச்சமென நினைக்கும் போக்கு, ரவுடி ராஜ்யம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X