சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நோயுடன் போராடும் ஏழை பெண் காப்பகத்தில் குழந்தைகள் சேர்ப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:நோயுடன் போராடிய ஏழை பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது மூன்று குழந்தைகள், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பாக்கியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உஷா, 40. இவருக்கு பாலா, 9 அன்பு, 6 என இரு ஆண் குழந்தைகளும், தரணி, 4, என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.இவரது கணவர் வீராசாமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மனைவி,
 நோயுடன் போராடும் ஏழை பெண் காப்பகத்தில் குழந்தைகள் சேர்ப்பு

தஞ்சாவூர்:நோயுடன் போராடிய ஏழை பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது மூன்று குழந்தைகள், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பாக்கியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உஷா, 40. இவருக்கு பாலா, 9 அன்பு, 6 என இரு ஆண் குழந்தைகளும், தரணி, 4, என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.இவரது கணவர் வீராசாமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்று விட்டார். உஷா, வீட்டு வேலை செய்து, மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.


கடும் வறுமை

கொரோனா காலத்தில், வறுமை காரணமாக, முறை யாக உணவு எடுத்துக் கொள்ளாமல், உஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மோசமான நிலையில், மெலிந்த தேகத்துடன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உஷா சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்கள் யாரும் வராத நிலையில், மூன்று குழந்தைகளும், கவனிப்பார் இன்றி நிர்கதியாய் நின்றனர்.

இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் கோவிந்த ராவ் உத்தரவுப்படி, நேற்று காலை பட்டுக் கோட்டை சப் - கலெக்டர் பாலசந்தர், தாசில்தார் தரணிகா ஆகியோர், உஷாவை நேரில் பார்த்து, விபரங்களை கேட்டறிந்தனர்

உஷாவிற்கு காசநோய், வயிற்று பகுதியில் கட்டி போன்றவை இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். பின், மூன்று குழந்தைகளையும் தஞ்சாவூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை பிரிந்த உஷா கண்ணீர் விட, அங்கிருந்த பலரும் அழுதனர்.


கண்ணீர் விட்ட தாசில்தார்

மருத்துவமனையில், தாசில்தார் தரணிகா விசாரணை நடத்திய போது, உஷா தனக்கு ஏற்பட்ட நிலைமையையும், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தும் கண்ணீர் வடித்தார். தாசில்தார் தரணிகாவும் அழுதபடியே, உஷாவின் பெண் குழந்தையின் கையை பற்றிக் கொண்டார். குழந்தைகளுக்கு புதிய துணிகள், பழங்கள் வாங்கி கொடுத்தார். குழந்தைகளுடன் பேச வசதியாக, அதிகாரிகள், உஷாவிற்கு மொபைல் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துஉள்ளனர்.

'தினமலர்' செய்தியை படித்த பலரும், அவர்களுக்கு உதவ முன்வந்து உள்ளனர். கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், ''உஷாவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய உத்தர விடப்பட்டுஉள்ளது. ''முதற்கட்டமாக ரேஷன் கார்டு, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவி தொகை வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X