சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரி ஜீயர் மடத்தின் இடம் மோசடியாக விற்பனை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை:நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 சென்ட் இடம், போலி பத்திரம் மூலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது, அம்பலமாகி உள்ளது.மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே, நம்பிள்ளை ஜீயர் சன்னிதி உள்ளது. இது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் பராமரிப்பில் உள்ளது. கடந்த, 1939ல் ஆண்டாள் என்பவர், நம்பிள்ளை சன்னிதியை

மதுரை:நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 சென்ட் இடம், போலி பத்திரம் மூலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது, அம்பலமாகி உள்ளது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே, நம்பிள்ளை ஜீயர் சன்னிதி உள்ளது. இது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் பராமரிப்பில் உள்ளது. கடந்த, 1939ல் ஆண்டாள் என்பவர், நம்பிள்ளை சன்னிதியை பராமரித்த, திருமாலிருஞ் சோலை ஜீயர் பெயரில், நந்தவன தோட்டம் அமைக்க, மாடக்குளத்தில், 26 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். நாளடைவில் இந்த இடம், ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கியது

.இது குறித்து, மடத்தின் பிரதிநிதி அப்பாத்துரை, 85, கூறியதாவது: கூடலழகர் கோவில் அருகே உள்ள, நம்பிள்ளை ஜீயர் சன்னிதி இடத்தை, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்தார். தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி, கடந்தாண்டு பிப்., 14ல் அந்த இடத்தை மீட்டோம். இதற்கான ஆவணங்களை தேடியபோது தான், மாடக்குளத்தில், மடத்திற்கு சொந்தமான, 26 சென்ட் இடம் இருப்பது தெரிந்தது. இதன் தற்போதைய மதிப்பு, 1 கோடி ரூபாய்.

மாநகராட்சி ஆவணங்களிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் தேடியபோது, 1962ல் ஆண்டாள் கையெழுத்திட்டு கொடுத்தது போல் போலி பத்திரம் தயாரித்து, இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின், 1980ல் சிலருக்கு இடத்தை விற்றுள்ளனர்.தற்போது மடத்தின் இடத்தை, ஏழு பிளாட்களாக பிரித்துள்ளனர். இதில், இரண்டு பிளாட்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாட்டில் தொழில் நிறுவனம் உள்ளது. மீதி இடம் காலியாக உள்ளது. ஆவணங்களின் அடிப்படையில், இந்த இடத்தை மீட்க, மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X