திருநெல்வேலி:''திருநெல்வேலி தொகுதியில், பா.ஜ., சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பா.ஜ., போட்டியிட முடிவு செய்துள்ள தொகுதிகளில், மாநில தலைவர் முருகன், கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு, பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார். திருநெல்வேலி தொகுதியில், மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ள நிலையில், நேற்று தச்சநல்லுாரில் இருந்து ஜங்ஷன் வரை, 500 டூ - வீலர்களில் பா.ஜ.,வினர் பங்கேற்ற ஊர்வலத்தை, மாநில தலைவர் முருகன் துவக்கி வைத்தார்.
முருகன் கூறியதாவது:திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தான், தொகுதியின் ஹீரோ. அமைச்சராக இருந்த அவர், பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் அறிமுகமானவர். அவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் பணியாற்றுவார். இருப்பினும், கூட்டணி முடிவு செய்யும் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE