ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான ஸ்படிகலிங்கத்தை சேதப்படுத்திய குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தினமும் காலை 4:00 முதல் 5:00 மணி வரை சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். பூஜைக்கு பின், சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைப்பர். சில நாட்களுக்கு முன் ஸ்படிகலிங்கத்தை குருக்கள் கவனமின்றி கையாண்டதால் கீழே விழுந்து சேதமடைந்தது.
இது குறித்து ஹிந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஸ்படிக லிங்க சேத பிரச்னையில் கோயில் இணை ஆணையர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசில் புகார்
பிப்.22ல் ராமேஸ்வரம் கோயில் கருவறைக்கு சென்ற காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி களை கோயில் குருக்கள் உதயகுமார், கிரி, சரத் ஆகியோர் தடுத்து நிறுத்தி கூச்சலிட்டனர். கருவறையில் சிவலிங்கத்தை மறைத்து ரகளை செய்து கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்திய குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE