பொது செய்தி

தமிழ்நாடு

வாங்க மோடி... வணக்கங்க மோடி: கொங்கு பாஷையில் வரவேற்பு பாடல்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கோவை:கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ., கட்சியினர், கொங்கு பாஷையில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துஉள்ளனர்.பா.ஜ., சார்பில், கோவை, 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், நாளை மாலை, 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு கூட்டம் அமைய வேண்டும் என்பதற்காக,
 வாங்க மோடி... வணக்கங்க மோடி: கொங்கு பாஷையில் வரவேற்பு பாடல்

கோவை:கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ., கட்சியினர், கொங்கு பாஷையில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடல் தயாரித்துஉள்ளனர்.

பா.ஜ., சார்பில், கோவை, 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், நாளை மாலை, 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு கூட்டம் அமைய வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வினர் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எதிர்பார்ப்பு



அவரை, கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில், கலை, இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு, 'ஆர்கெஸ்ட்ரா' சண்முகம் இணைந்து, பாடல் வரிகளை தயாரித்துஉள்ளனர்.

''வாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடி'' நீங்க தந்த திட்டங்கள் கோடி மக்கள் என்றும் உங்க பின்னாடி'' அனைவருக்கும் வீடு, மருத்துவ காப்பீடுவாங்க மோடி வணக்கங்க மோடிகொங்கு மக்கள் வரவேற்போம் கோடி...'' என்ற மூன்று நிமிட பாடலை தயாரித்துள்ளனர்.அதில், 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்ற முதல் வரியை, அகில இந்திய பொது செயலர் சி.டி.ரவி, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை தலைவர் அண்ணாமலை, இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பாடிஉள்ளனர்.

சில வரிகளை, பாடகர்களுடன் இணைந்து, வானதியும் பாடியுள்ளார்.வார்த்தைகளை எளிமை படுத்தி, சில திருத்தங்கள் செய்து, முழுமை செய்யபட்டுள்ள பாடல், வெளியிடப்படுகிறது.'வெற்றி நடை போடும் தமிழகமே' என, அ.தி.மு.க.,வினரும், 'ஸ்டாலின் வர்றாரு... விடியல் தரப்போறாரு' என, தி.மு.க.,வினரும் வீதிக்கு வீதி பாடல் ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ.,வினர் தயாரித்துள்ள பாடலின் சில வரிகளை மட்டும் முன்னோட்டமாக, நேற்று, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் அக்கட்சியினர் பரப்பினர். இது, பல்வேறு குழுக்களுக்கும் பரவி, முழு பாடலை கேட்க, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


பயண திட்டம்



இன்று காலை, 7:45 மணிக்கு டில்லியில் இருந்து, தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், காலை, 10:20 மணிக்கு, சென்னை வந்து, ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர், மீண்டும் மதியம், 2:10 மணிக்கு சென்னை திரும்பி, தனி விமானத்தில் மாலை, 3:30 மணிக்கு கோவை வருகிறார்.விமான நிலையத்தில் இருந்து காரில், 'கொடிசியா' செல்லும் பிரதமர் பல்வேறு திட்டங்களையும், முடிவு பெற்ற திட்ட பணிகளையும் துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர்பன்னீர்செல்வம்., அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். மாலை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள பா.ஜ., பொதுக் கூட்டத்தில், பிரதமர் பங்கேற்று பேச உள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, கொடிசியா மைதானத்தில், போலீஸ் பாதுகாப்புடன் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.குண்டு துளைக்காத கார்கள்பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக, டில்லியில் இருந்து, இந்திய விமானப்படை விமானத்தில், சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள், 30 பேர், கோவை வந்துள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி பயணம் செய்வதற்காக, குண்டு துளைக்காத, நான்கு கார்களும் வரவழைக்கப்பட்டு உள்ளன.

இந்த நான்கு கார்களும், அரசு விருந்தினர் மாளிகையில், போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்பு டி.ஜி.பி., ராஜேஸ் தாஸ், பாதுகாப்பு பணிகளை பார்வையிட நேற்று கோவை வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X