கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தகுதியானவர்களுக்கு 'கலைமாமணி' அரசுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை:தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சேர்மத்துரை தாக்கல் செய்த பொதுநல மனு: என் தந்தை தேவசகாயம், மூத்த சகோதரி வேல்கனி வில்லுப்பாட்டு கலைஞர்கள். வேல்கனிக்கு தமிழக அரசு, 1994ல் கலைமாமணி விருது வழங்கியது. அவர்களிடம் நான்

மதுரை:தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சேர்மத்துரை தாக்கல் செய்த பொதுநல மனு: என் தந்தை தேவசகாயம், மூத்த சகோதரி வேல்கனி வில்லுப்பாட்டு கலைஞர்கள். வேல்கனிக்கு தமிழக அரசு, 1994ல் கலைமாமணி விருது வழங்கியது. அவர்களிடம் நான் வில்லுப்பாட்டு கற்று, பலரிடம் பாராட்டு பெற்றுள்ளேன்.

கலைமாமணி விருதை, தகுதியில்லாதவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்க ஒரு வழக்கு தொடரப்பட்டது. விருதுக்கு சில நெறிமுறைகளை பின்பற்ற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.விருதுக்கு வயது வரம்பு, தகுதி, நெறிமுறைகளை இதுவரை தமிழக அரசு வகுக்கவில்லை. இதனால், கலைஞர்கள் அல்லாத மற்றும் தகுதி இல்லாத சிலர் விருது பெறுகின்றனர்.

உண்மையான கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.நிபுணர் குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி, தகுதியான கலைஞர்களுக்கு, கலைமாமணி விருது வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, தமிழக சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை செயலர், கலை மற்றும் கலாசாரத் துறை இயக்குனர். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மார்ச், 23க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X