கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.திருச்சி மாவட்டம், நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த சன்மதி தாக்கல் செய்த பொதுநல மனு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆங்கில வழி, பி.இ., தமிழ் வழியில் படித்தேன். முன்னுரிமைதமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில்

மதுரை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

திருச்சி மாவட்டம், நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த சன்மதி தாக்கல் செய்த பொதுநல மனு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆங்கில வழி, பி.இ., தமிழ் வழியில் படித்தேன்.


முன்னுரிமை

தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு, 2010ல் கொண்டு வந்தது. இதனால் பலர் பயனடைந்தனர்.இச்சட்டத்தில் அரசு, 2020ல் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, ஒரு பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டால், அவ்வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

பிளஸ் 2, இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டால், அந்தக் கல்வி முழுதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.இச்சட்டத் திருத்தமானது எங்களைப் போன்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பாகுபடுத்தும் வகையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.


சட்டத் திருத்தம்



நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு:வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி முழுதையும், தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே இச்சலுகை பொருந்தும் வகையிலும், இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலும் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X