கிருஷ்ணகிரி:கள்ளக்காதலனை கொன்ற, கள்ளக்காதலி உட்பட மூவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி, பெங்களூரைச் சேர்ந்த மம்தாதேவி, 34. திருமணத்துக்கு முன், இவருக்கும், பெங்களூரு, கார் மெக்கானிக் கிருஷ்ணா, 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. திருமணத்திற்கு பின், மம்தாதேவிக்கும், கிருஷ்ண கிரியைச் சேர்ந்த செவத்தான், 40 என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த கிருஷ்ணா, அடிக்கடி தகராறு செய்தார்.ஆத்திரமடைந்த மம்தா தேவி, 2017 டிச., 9ல் கிருஷ்ணாவை, கிருஷ்ணகிரி அருகே, பொன்மலை கோவில் மாந்தோப்புக்கு அழைத்து சென்றார். அங்கு, செவத்தான் மற்றும் அவரது உறவினர் சக்தி வேல், 20, ஆகியோர், கிருஷ்ணாவின் தலையை துண்டித்து கொன்றனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், மம்தாதேவி உட்பட மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, மூவருக்கும் இரட்டை ஆயுள், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE