அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரிகள் இல்லாத தமிழகம் 'மை இந்தியா பார்ட்டி' உறுதி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை:''நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் அனைத்து வரிகளையும் ரத்து செய்து, வரிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்,'' என மதுரையில் நடந்த, 'மை இந்தியா பார்ட்டி' கட்சி தேர்தல் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், தேசிய தலைவர் அனில் குமார் ஓஜா தெரிவித்தார்.அவர் பேசியதாவது:ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும், தமிழகத்தில் வீடு, குழாய் வரிகள் உட்பட அனைத்து வரிகளும்,

மதுரை:''நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தில் அனைத்து வரிகளையும் ரத்து செய்து, வரிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்,'' என மதுரையில் நடந்த, 'மை இந்தியா பார்ட்டி' கட்சி தேர்தல் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், தேசிய தலைவர் அனில் குமார் ஓஜா தெரிவித்தார்

.அவர் பேசியதாவது:ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும், தமிழகத்தில் வீடு, குழாய் வரிகள் உட்பட அனைத்து வரிகளும், வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணத்தையும் ரத்து செய்வோம். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்து, ஆர்கானிக் உரம், விவசாய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு, 24 மணி நேர இலவச தண்ணீர் வசதி செய்யப்படும்.

அனைவருக்குமான இலவச மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பஸ்களில், பெண்கள் இலவச பயணம் செய்யலாம். 25 சதவீதம் மதுக்கடைகள் மூடப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம். ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் வழங்குவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

கட்சியின் மாநில தலைவர் நாராயண பிரபு, மதுரை மாவட்ட தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் பாண்டியராணி, செயலர் கவிதா, துணைச் செயலர் வரதராஜன், பொருளாளர் செல்வம், தென் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X