அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடன் சுமை அதிகரிப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதற்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தி.மு.க. தலைவர் ஸ்டாலின்:தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமத்தியுள்ள முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடன் வாங்கி வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.இதுவா வெற்றி நடை போடும் தமிழகம். கடன் சுமையில் தள்ளாடும்

சென்னை:தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதற்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின்:

தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமத்தியுள்ள முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடன் வாங்கி வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.இதுவா வெற்றி நடை போடும் தமிழகம். கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் சுமத்தப்பட்டுள்ளது

.ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ:

இடைக்கால பட்ஜெட்டில் கடன் சுமை 5.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்தது தான் பழனிசாமி அரசின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டால் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி:

அ.தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு பின் அமைய உள்ள புதிய ஆட்சிக்கு கடன் சுமையாக 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டுச் செல்வது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாக இருக்க முடியும்.

அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன்:

ஒரே ஆண்டில் 1.70 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகமாகி இருப்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

த.மா.கா. தலைவர் வாசன்:

'தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி உள்ளது. தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பங்கேற்று நியாயமான விவாதத்திற்கு இடம் கொடுத்து செயல்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X