சென்னை:நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.
துாத்துக்குடியை சேர்ந்த நிலக்கரி நிறுவனம் தாக்கல் செய்த மனு:மின் வாரியத்திற்கு 1330 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டது. இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர் என்றால் விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 30 நாட்கள் அவகாசம் தர வேண்டும்.
ஆனால் இந்த டெண்டரில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் தான் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இது டெண்டர் விதிமுறைகளுக்கு முரணானது.இந்தியாவில் வெளிவரும் இதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிட்டிருக்க வேண்டும்; அதையும் மேற்கொள்ள தவறி விட்டனர். எனவே டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்; டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதி புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் உத்தரவை இன்றைக்கு நீதிபதி புகழேந்தி தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE