ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு: தடுப்பதற்கு தனி அமைச்சர் நியமனம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகளால் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தனிமையை போக்கும் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளாக தற்கொலை விகிதங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. கொரோனா நெருக்கடி சூழலில் இளம் வயதினர் அதிகம்

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகளால் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க தனிமையை போக்கும் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளாக தற்கொலை விகிதங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. கொரோனா நெருக்கடி சூழலில் இளம் வயதினர் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.


தற்கொலைகள் அதிகரிப்பு


11 ஆண்டுகளில் முதல் முறையாக மீண்டும் அங்கு தற்கொலைகள் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபரில் கொரோனாவால் இறந்தவர்களை விட தற்கொலை செய்து இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக பதிவானது. இது குறித்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.அதில், பணி பாதுகாப்பு இன்றி தனிமையில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் அதிகம் இறந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.



latest tamil news




தனிமைக்கான அமைச்சகம்


இந்நிலையில் தனிமைக்கான அமைச்சரை அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா நியமித்துள்ளார். உலகளவில் 2018-ல் பிரிட்டன் முதல் நாடாக தனிமைக்கான அமைச்சகத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜப்பானும் அத்தகைய முடிவு எடுத்துள்ளது.


latest tamil news



தனிமைக்கான அமைச்சர் சகமோட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொற்றுநோய்களுக்கிடையே அதிகரித்து பெண்களின் தற்கொலை மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்களை ஆராய ஒரு செயல்திட்டத்தை பிரதமர் கேட்டுள்ளார். சமூக தனிமையை தடுப்பதற்கும், மக்களிடையேயான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-பிப்-202113:29:46 IST Report Abuse
Ramesh Sargam வாழ்க்கையில் தனிமை தேவைதான். ஆனால், தனிமையே வாழ்க்கையாக மாறக்கூடாது. அப்படி தனிமையே வாழ்க்கையாக மாறிவிட்டால், இதுபோன்ற தற்கொலைகள் அதிகம் ஏட்பட வாய்ப்பு உள்ளது. ஜப்பான் அரசு மேட்கொண்ட இந்த தனி அமைச்சர் நியமனம் வரவேற்க பட வேண்டிய ஒன்று.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
24-பிப்-202110:30:44 IST Report Abuse
Nellai tamilan மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி. குடும்ப உறவுகள் மேம்பட வேண்டும். தனிமை கொடிய நோய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X