மதுரையில் கருணாநிதி சிலை திறப்பதற்கு பா.ஜ., சார்பில் ஆட்சேபனை தெரிவித்து கலெக்டர் அன்பழகனிடம் மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் மனு வழங்கினார். ஆனாலும் சிலை திட்டமிட்டபடி ஸ்டாலினால் மதியம் திறக்கப்பட்டது.
ஆனால் அன்று காலை பா.ஜ., மாநகர் தலைவர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வடக்கு வெளியிலிருந்து சிலை அமைந்த இடத்திற்கு ஊர்வலமாக சென்று மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். பா.ஜ.,வினரை ஏற்றிக் கொண்டு போலீஸ் பஸ், சிலை இருந்த இடம் வழியாக சென்றது. அந்தளவுக்கு நகர் போலீசாரும் தங்கள் 'புலனாய்வு அறிவை' பயன்படுத்தி அந்த வழியாக செல்ல அனுமதித்தனர்.
அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ.,வினர் சென்ற பஸ்சை வழிமறிக்க முயன்றனர். ஒரிருவர் பா.ஜ.,கொடிகளை பறித்து மிதித்து பஸ்சை அடித்தபடி விரட்ட துவங்க, பஸ்சிற்குள் இருந்த பா.ஜ.,வினர் கோஷங்களை மாற்றி 'அய்யோ அடிக்கிறாங்க... அடிக்கிறாங்க... ' என நடிகர் வடிவேலு பாணியில் அலற சுதாரித்து கொண்ட போலீசார் விரட்டியவர்களை அப்புறப்படுத்தினர்
.பா.ஜ.,வினர் மட்டும் அலறவில்லை என்றாலோ அல்லது சிலை திறப்பு விழா நடந்த மதியம் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலோ தி.மு.க.,வினால் ஒரு ரவுன்ட் கட்டப்பட்டிருப்பர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE