பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கிராம உதவியாளர்கள் இன்று முதல் தொடர் ஸ்டிரைக்

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை:அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இன்று(பிப்., 24) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.மதுரையில் சங்க மாநில தலைவர் ராஜசேகர் கூறியதாவது: கிராம உதவியாளர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுகின்றனர். பேரிடர் காலங்களில் எங்கள் பணி இன்றியமையாதது. ஆனால்

மதுரை:அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இன்று(பிப்., 24) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மதுரையில் சங்க மாநில தலைவர் ராஜசேகர் கூறியதாவது: கிராம உதவியாளர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுகின்றனர். பேரிடர் காலங்களில் எங்கள் பணி இன்றியமையாதது. ஆனால் சம்பளம் குறைந்தளவு வழங்கப்படுகிறது. மேலும் கிராம உதவியாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.

மத்திய அரசு வழங்குவது போல பொங்கல் போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும். இக்கோரிக்கை களை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அரசு நிறைவேற்ற முன்வரவில்லை. எனவே மாநில செயற்குழு முடிவின்படி கிராம உதவியாளர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்.

அன்று தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். பிப்., 26 ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும். மார்ச் 1 முதல் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிப்., 28 ல் முடிவு செய்யப்படும், என்றார். மாவட்ட நிர்வாகிகள் சாக்ரடீஸ், மாரியப்பன், மணிகண்டன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-பிப்-202116:29:18 IST Report Abuse
Bhaskaran லஞ்சம் ஆரம்பம் இவர்களிடம் இருந்து தான்
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
24-பிப்-202104:35:07 IST Report Abuse
.Dr.A.Joseph அரசு ஊழியர்கள் ஊதியங்கள் குறித்து போராடினால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும். கடுமையான அளவில் ஊதியம் பெறுகிறார்கள்.மக்களின் வரியில் பெரும் பகுதி அவர்களுக்கே போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X