மதுரை:மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது:
அரசின் அச்சாணியாக விளங்கும் வருவாய்த்துறை அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்தது.
தனி மேம்படுத்தப்பட்ட சம்பளம், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை 8500 பேர் பிப்., 17 முதல் மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வருவாய் அலுவலகங்கள் முடங்கியுள்ளன. முதல்வர் பழனிசாமி உடனடியாக வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE