கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வாகன வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை:மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்க கோரும் வழக்குகளை இனி இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை மாடக்குளம் காளீஸ்வரன் தாக்கல் செய்த மனு:மதுரை மாடக்குளம் கண்மாய் அருகே கபாலீஸ்வரர் மலை உள்ளது. இங்கு ஜன.,24ல் சிலர் சட்டவிரோதமாக இயந்திரம் மூலம் கிராவல் மணல் அள்ளினார். அவர்களையும்,

மதுரை:மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்க கோரும் வழக்குகளை இனி இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாடக்குளம் காளீஸ்வரன் தாக்கல் செய்த மனு:மதுரை மாடக்குளம் கண்மாய் அருகே கபாலீஸ்வரர் மலை உள்ளது. இங்கு ஜன.,24ல் சிலர் சட்டவிரோதமாக இயந்திரம் மூலம் கிராவல் மணல் அள்ளினார். அவர்களையும், இயந்திரத்தையும் சுப்பிரமணியபுரம் போலீசில் மக்கள் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் தப்பிக்கவிட்டுள்ளனர். சரியாக விசாரிக்கவில்லை. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு காளீஸ்வரன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு: மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவற்றை விடுவிக்க உத்தரவிடக்கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுக இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்நீதிமன்ற தனி நீதிபதி முன் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடுவது ஏன்.

வாகனங்களை விடுவிக்க உத்தரவிடுவதை எதிர்த்து ஏன் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்வதில்லை என கேள்வி எழுப்பினர். மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரும் வழக்குகளை வரும் காலங்களில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 12க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X