சென்னை:சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு வினியோகிக்கும் பணி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று துவங்குகிறது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர், விருப்ப மனு வினியோகத்தை, இன்று காலை, 9:30 மணிக்கு, துவக்கி வைக்க உள்ளனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டசபை பொதுத்தேர்தலில், போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு வாங்கி, பூர்த்தி செய்து அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு மார்ச், 5 வரை வழங்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE