சென்னை:கோவையில், 6,683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்ட பணிக்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இது, தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், விமான நிலையம் - விம்கோநகர், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, 54 கி.மீ., மெட்ரோ திட்டம் நிறைவேற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
மெட்ரோ இரண்டாவது திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித் தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணிகளுக்கு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இத்துடன், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் வரை, மெட்ரோ பாதை நீட்டிப்பிற்கான விரைவான திட்ட அறிக்கை, தாம்பரத்திலிருந்து, வேளச்சேரி வரை மெட்ரோ பாதை அமைக்க, விரிவான சாத்தியக்கூறு அறிக்கையும், தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கோவையில், 6,683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்ட பணிக்கான, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE