பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்கள் படம் திறப்பு

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்களின் படங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார்.தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்களான டாக்டர் ப.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது.சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை
சட்டசபை, வஉசி, படம் திறப்பு

சென்னை : தமிழக சட்டசபையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., உள்ளிட்ட மூன்று தலைவர்களின் படங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார்.

தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்களான டாக்டர் ப.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது.சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., முன்னிலை வகித்தார். மூன்று தலைவர்களின் படங்களையும், முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார். தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.


latest tamil news


வ.உ.சிதம்பரனார் படத்திற்கு கீழே, கப்பலோட்டிய தமிழர்; டாக்டர் ப.சுப்பராயன் படத்திற்கு கீழே, பெருந்தன்மை, பேதமின்மை, பேராண்மை; ஓமந்துாரார் ராமசாமி ரெட்டியார் படத்திற்கு கீழே, நேர்மை, எளிமை, துாய்மை என்ற, வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, துணை சபாநாயகர் ஜெயராமன் வரவேற்றார். சட்டசபை செயலர் சீனிவாசன் நன்றி கூறினார். படத்திறப்பு விழாவில், அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaram - Rajapalayam,இந்தியா
24-பிப்-202109:07:53 IST Report Abuse
Sivaram திரு.P.S.குமாரசாமி ராஜா , சென்னை மாகாண முன்னாள் முதல்வர் மற்றும் ஒரிசா மாநிலத்தின் கவர்னராக இருந்த போதிலும் அவர் படம் சட்ட சபையில் இடம் பெறாததின் காரணம் திராவிட அரசியலின் தாக்கமா அல்லது ஓட்டு அரசியலா
Rate this:
Cancel
mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-202108:39:09 IST Report Abuse
mannandhai Why VOC wearing Black Towel.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-பிப்-202107:47:44 IST Report Abuse
Bhaskaran அப்படியே எங்க கொள்ளுத்தாத்தாதா கவிமனிப்படத்தையும் வைக்கணும் ....விஜயதாரணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X