உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அயோக்கியரின் கடைசிப் புகலிடம், அரசியல்-; பணம், பாதாளம் வரை பாயும்' என்ற பழமொழிகள் இப்போது நிரூபணமாகி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க, கட்சி மாறும் இந்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
ஆற்காடு பா.ம.க., பிரமுகர் ஒருவரின் கடனை அடைத்து, தி.மு.க., அவரை இழுத்துள்ளதாம். இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது தான். ஆள் பிடிக்கும் வேலை, இன்னும் கனஜோராக நடந்து வருகிறது. புதுச்சேரியில் நடக்கும் கதை, எல்லாருக்கும் தெரியும். கொள்கை, கட்சி, விசுவாசம் என எதுவுமே, இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லை. 'பணம் தருகிறாயா... எங்கு வேண்டுமானாலும் வருவேன்' என்பது தான், அவர்களின் கொள்கை.

பச்சோந்தி போன்ற இந்த அரசியல்வாதிகள், மிக மோசமான நடத்தை உடையோர். எம்.பி., - எம்.எல்.ஏ., ஆன பின், ஒருவர் கட்சி மாறினால், பதவி பறிப்பு மட்டும் மேற்கொள்ளாமல், அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில், பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் ஏன் வழங்க வேண்டும்? தமிழக வாக்காளரே... தன் சுயநலத்திற்காக, கட்சி மாறி, தேர்தலில் போட்டியிடும் நபருக்கு ஓட்டு அளித்து, அவரின் பச்சோந்தித்தனத்தை ஆதரிக்காதீர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE