பொது செய்தி

தமிழ்நாடு

39 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.44 கோடி நிவாரணம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 39 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.44 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பருவம் தவறி ஜன.,ல் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. பாதிப்புகளை வேளாண் இணை இயக்குநர் ஷேக்அப்துல்லா தலைமையில் கணக்கெடுத்தனர். மத்திய சிறப்புக் குழுவினரும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 39 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.44 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பருவம் தவறி ஜன.,ல் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. பாதிப்புகளை வேளாண் இணை இயக்குநர் ஷேக்அப்துல்லா தலைமையில் கணக்கெடுத்தனர். மத்திய சிறப்புக் குழுவினரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் கணக்கெடுப்பின் படி 2 லட்சம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டு 1.30 லட்சம் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8000 நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து முதற்கட்டமாக 39 ஆயிரம் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மழை பாதிப்பு நிவாரணமாக ரூ.44 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X