ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன்கோயிலில் மாசித்திருவிழாவில் நாளை மறுநாள் (பிப்.,26ல்) தேரோட்டம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் செல்லும் வழியில் பெருவயல் ரெணபலி முருகன்கோயில் உள்ளது. இங்குள்ள ராமநாதசுவாமி, பர்வதமர்த்தினி அம்மன், சத்ருசம்ஹார வேல் ஆகியவற்றை வழிபட்டால் ராமேஸ்வரம், திருச்செந்துார் தலங்களுக்கு சென்றுவந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இந்தக்கோயிலில் கடந்த பிப்.,15 முதல் 27 வரை மாசி மகோத்ஸவ திருவிழா நடக்கிறது.
விழாவில் தினமும் சுவாமிக்கு அபிேஷக மகாதீபாராதனை நடக்கிறது, இரவு பல்லக்கு, சப்பரம் ஆகிய வாகனங்களில் உலா வருகிறார்.நேற்று (பிப்.,23ல்) சண்முகர் உற்ஸவம் 3 கால பூஜைகள் தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (பிப்.,26ல்) காலை 9:30மணி அளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகிகள் செய்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE