சிவகங்கை : அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியருக்கு 10 லட்ச ரூபாய், உதவியாளருக்கு 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது நாளான நேற்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் சாந்தி, செயலாளர் பாக்கியமேரி, பொருளாளர் தாமரைச்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமங்களம், துணைத்தலைவர்கள் லட்சுமி, மலர், சசிகலா, தவமலர், இணை செயலாளர்கள் கலைச்செல்வி, ராதா, ஜஸ்டின் பிரேமா, ராணி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் உமாநாத், செயலாளர் வீரையா, துணைத்தலைவர் முருகேசன் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE