சிவகங்கை : வருவாய்துறையினர் வேலை நிறுத்தம் காரணமாக சான்றிதழ் வழங்கும் பணி முடங்கியுள்ளது.
வருவாய்த்துறையினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.9 தாலுகா அலுவலகங்கள், 2 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை பிரிவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 'இ' சேவை மையங்களில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்த பொது மக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் ஆனந்தபூபாலன், செயலாளர் தமிழரசன்,துணைத்தலைவர்கள் கிருஷ்ணகுமார், அசோக்குமார், சேகர், பாலமுருகன், இணைச்செயலாளர்கள் ராஜாமுகமது, புஷ்பவனம், தென்னரசு, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், அருண்பிரசாத் பங்கேற்றனர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும், என தெரிவித்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE