ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைவளாகத்தில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட நவீன சீமாங் சென்டரை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இப்பிரிவில் பேறுகால மகளிர், பச்சிளம் குழந்தைகளுக்கு 250 படுக்கைகளும், பிறந்த சிசுக்களுக்கு 18 படுக்கைகளும், கர்ப்பிணி சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்குகள், குழந்தைகள், சிசு நலச் சிகிச்சைப் பிரிவுகளும் அமைந்துள்ளன.குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்களுக்கான கருத்தரங்கு கூடங்கள், ஓய்வறை, பார்வையாளர் பகுதி என பல வசதிகளும் உள்ளன. மின்சாரம் தடைபட்டால் உடனடி மின்சாரம் தரும் நவீன ஜெனரேட்டரும் உள்ளது.
இங்கு நடந்த நிகழ்ச்சியில் டீன் அல்லி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் குத்து விளக்கேற்றினர்.டாக்டர்கள் நந்தினி, பத்மபிரியா, முகைதீன்பிச்சை, செவிலியர் கண்காணிப்பாளர்கள் மதினா பேகம், சண்முகவடிவு, தலைமை மருந்தாளுநர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE