தமிழக அரசு பல லட்சம் கோடிகளை கடன் வாங்கினாலும் மக்கள் நலத்திட்டங்களில் அக்கறை செலுத்தும் அரசாக உள்ளது. பல ஆயிரம் பஸ்கள் மக்களின் வசதிக்காக வாங்க உள்ளனர்.அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மதுக்கடையை படிப்படியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு தள்ளுபடி மானியம் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தலைவர் இயற்கை மற்றும் விபத்தில் மரணம் நேரிட்டால் அதற்கு இன்சூரன்ஸ் தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.பி.கந்தசாமி (ஓய்வு), வங்கி சூப்பர்வைசர், பரமக்குடி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE