தள்ளாடும் தண்ணீர் தொட்டி; அவதியில் பெரும்பள்சேரி மக்கள்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : பில்லர்கள் சிதைந்து தள்ளாடும் மேல்நிலை நீர்தொட்டியால் அச்சம், தினசரி துாய்மைப்பணி இல்லாததால் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு, குடிநீர் பற்றாக்குறை, மழை பெய்தால் சகதியாகும் மண்ரோடு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அவதிக்கு ஆளாகி வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பள்சேரி மக்கள்.ஒரு புறமும்

ஸ்ரீவில்லிபுத்துார் : பில்லர்கள் சிதைந்து தள்ளாடும் மேல்நிலை நீர்தொட்டியால் அச்சம், தினசரி துாய்மைப்பணி இல்லாததால் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு, குடிநீர் பற்றாக்குறை, மழை பெய்தால் சகதியாகும் மண்ரோடு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அவதிக்கு ஆளாகி வருகின்றனர்

ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பள்சேரி மக்கள்.ஒரு புறமும் நகராட்சிப்பகுதியும், மறுபுறம் திருவண்ணாமலை ஊராட்சியின் கீழும் உள்ள இப்பகுதியில் இரண்டு மேல்நிலை தொட்டிகள் இருக்கும்நிலையில் நல்ல தண்ணீருக்கான மேல்நிலை தொட்டியின் பில்லர்கள் சிதைந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது

கண்மாய்கரைகளின் சீரமைப்பு பணியின்போது உடைக்கப்பட்ட குடிநீர்குழாய்களை இன்றும் சரி செய்யாததால் மேல்நிலை தொட்டிக்கு நீர் ஏற்றமுடியாமல் சரிவர குடிநீர் சப்ளை செய்யமுடியாதநிலை காணப்படுகிறது.மயானக்கரைக்கு செல்ல சரியான ரோடு வசதியில்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கபட்டுள்ளநிலையில் சில தெருக்களில் மண்தரையே இருப்பதால் மழைகாலத்தில் சகதியாக உள்ளது.போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால் சாக்கடையில் கழிவு தேங்கி கொசுத்தொல்லை ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X