வட்டார போக்குவரத்து துறையின் பணிகள் என்ன.- தகுதியான பயனாளிகளுக்கு ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, விபத்தில்லா பயணத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது.
வயதானோர் ஓட்டுனர் உரிமம் பெறலாமா.- அரசு டாக்டர் பரிந்துரைப்படி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். வயது ஒரு தடையில்லை.
விருதுநகர் எல்லைக்குள் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.- 800 லாரிகள், 800 வேன்கள், 57 பஸ்கள், 15 மினி பஸ்கள் உட்பட 2500 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியிடம் பற்றாக்குறையாக உள்ளதால் பணிகள் பாதிக்கப்படுகிறதா.- இப்பதவிக்கு அமலாக்கப்பிரிவு மோட்டார் வாகன ஆய்வாளர் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பணிகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்கிறோம்.
ராணுவ வீரர்களுக்கான கொடி நாள் வசூலில் சாதனை படைக்கப்பட்டுள்ளதா.- ஆம்.ரூ.12 லட்சம் வசூலித்து அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா.- ஆண்டு தோறும் ஜனவரியில் பத்து நாட்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு முதல் முதலாக ஜன.,18 முதல் பிப்.,17 வரை சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
சாலை விபத்துக்களுக்கு காரணம் என்ன.- கவனக்குறைவு, கவன சிதறல், மன உளைச்சல், அவசரம், திட்டமிடாதல் உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்களும், அதனால் உயிர் பலிகளும் நடக்கிறது.
விபத்தை தவிர்க்க ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதா.- பள்ளி, கல்லுாரி மாணவர்கள், டிரைவர்களுக்கு மாதம் தோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
ஓட்டுனர் உரிமம் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்காக சிலர் புரோக்கர்களை நாடுகின்றனர். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா.- அனைத்தும் ஆன்லைன் பரிவர்த்தனையாகி விட்டது. இதனால் புரோக்கர்களுக்கு இங்கு இடமில்லை. பயனாளிகள் நேரடியாக அலுவலகம் வந்தால்தேவையான உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்.
புரோக்கர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.விருதுநகரில் விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதா.ஆண்டு தோறும் விபத்துக்கள் குறைந்து வருகிறது.போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை பொதுமக்கள் தடுக்கலாமா.- போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை தட்டிக்கேட்கும், தடுக்கும் சட்டப்படியான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது
இதை 'போக்குவரத்து விதிமீறலின் முதல் மந்திரம்' என்பர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE