பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்//

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ஆன்லைன் பயிலரங்கம் விருதுநகர்: வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் டி.பி.டி., ஸ்டார் கல்லுாரி திட்டத்தின் கீழ் உயிர்த்தொழில் நுடப்வியல் துறை சார்பில் மாநில அளவிலான ஆன்லைன் பயிலரங்கம் நடந்தது. துறை தலைவர் ஜெயசிம்கா, உதவி பேராசிரியர் சிந்தியா வரவேற்றனர். முதல் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லுாரி துறை தலைவர் திருமலைவாசன் ,உதவி பேராசிரியர் தமிழ் இலக்கியா

ஆன்லைன் பயிலரங்கம்

விருதுநகர்: வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் டி.பி.டி., ஸ்டார் கல்லுாரி திட்டத்தின் கீழ் உயிர்த்தொழில் நுடப்வியல் துறை சார்பில் மாநில அளவிலான ஆன்லைன் பயிலரங்கம் நடந்தது. துறை தலைவர் ஜெயசிம்கா, உதவி பேராசிரியர் சிந்தியா வரவேற்றனர். முதல் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லுாரி துறை தலைவர் திருமலைவாசன் ,உதவி பேராசிரியர் தமிழ் இலக்கியா பேசினர். உதவி பேராசிரியர்கள் இந்திரா, ராஜேஸ்வரி நன்றி கூறினர்.............

வேலை வாய்ப்பு முகாம்

அருப்புக்கோட்டை : சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். துணை முதல்வர் கந்தவேல்சாமி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அதிகாரி சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். சென்னை பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நடத்திய முகாமில் 170 மாணவர்களும், ஓசூர் அசோக் லேலண்ட் நடத்திய முகாமில் 182 மாணவர்களும் கலந்து கொண்டனர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டது.............

ஆலேசனை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார் :கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் சிவகாசி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. ஆலோசகர்களின் துணைக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ராஜசேகரன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டயுதபாணி தலைமை வகித்தார். சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.லிங்கா பள்ளி முதல்வர் அல்காசர்மா, அமைப்பாளர் தேரிசெல்வம் பேசினர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.............

தாய்மொழி தின சொற்பொழி

வசிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ்த்துறை சார்பில் தாய்மொழி தின சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மாணவர் இருளப்பராஜா வரவேற்றார். உதவி பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முதுகலை தமிழ்த்துறை தலைவர் சிவனேசன் தலைமை வகித்தார். முஸ்லிம் பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் பேசினார். உதவி பேராசிரியர்கள் இளவரசு, அருள்மொழி, பொன்னுராஜன், சந்தரக்குமார், தமிழரசி, வனோத் கலந்து கொண்டனர். மாணவர் வினோத்குமார் நன்றி கூறினார். ஏற்பாடு செய்தவர்களை கல்லுாரி முதல்வர் அசோக் பாராட்டினார்............

சாலை பாதுகாப்பு ஊர்வலம்

சிவகாசி :அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை, யங் இந்தியன்ஸ் , திருத்தங்கல் போக்குவரத்து போலீஸ் இணைந்து சாலை பாதுகாப்பு வாகன ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். மாணவர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துறை தலைவர் ராஜசேகரன் , தனலட்சுமி, ஜேக்கப்மதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். .............

வேலைவாய்ப்பு சொற்பொழிவு

சிவகாசி : காளீஸ்வரி கல்லுாரி வணிகவியல் துறையின் வணிக உலகம் சார்பில் வங்கி துறையில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. வணிகவியல் துறை தலைவர் குருசாமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மெர்க்கண்டைல் வங்கி எழுத்தர்கள் விஜயகுமார் , சந்தோஷ் பேசினர். மாணவி ராலியாகனி நன்றி கூறினார். உதவி பேராசிரியர் மலைநம்பிராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X