திருக்கனுார் : சோரப்பட்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்தும் பணியை மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி துறை மூலம் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மண்ணாடிப்பட்டு, திருபுவனை தொகுதிகளில் திருக்கனுார், காட்டேரிக்குப்பம், திருபுவனையை மையமாகக் கொண்டு மூன்று குழுக்கள் அமைத்து குறைந்த கட்டணத்தில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி நடக்கிறது.சோரப்பட்டு கிராமத்தில் நடக்கும் பணிகளை மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். உதவி பொறி யாளர் மல்லிகார்ஜூனா உட்பட பலர் பங்கேற்றனர்.ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், அனைவருக்கும் குடிநீர் திட்டத்தில் குறைந்த கட்டணமான ரூ.1500 மட்டும் செலுத்தி இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களே வீடுகளுக்கு நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி தருவர். இதனை கிராம பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாரேனும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தாமல் இருந்தால் இணைப்புகள் துண்டிக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE