தமிழ்நாடு

பரிதவிப்பு! திறக்கப்படாது மூடப்பட்டு கிடக்கும் நூலகங்கள்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான நுாலகங்கள் மூடியே கிடப்பதால் புத்தகங்களை படிக்க முடியாது இளைஞர்கள் என பல தரப்பினரும் அல்லாடும் நிலை தொடர்கிறது.மாவட்டத்தில் மக்களிடம் படிக்கும் அறிவை வளர்க்கும் வகையில் நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவைகள் தாலுகா அளவில் விரிவடைந்து ஒவ்வொரு கிராமங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்கள்,

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான நுாலகங்கள் மூடியே கிடப்பதால் புத்தகங்களை படிக்க முடியாது இளைஞர்கள் என பல தரப்பினரும் அல்லாடும் நிலை தொடர்கிறது.

மாவட்டத்தில் மக்களிடம் படிக்கும் அறிவை வளர்க்கும் வகையில் நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவைகள் தாலுகா அளவில் விரிவடைந்து ஒவ்வொரு கிராமங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளன. இங்கு புத்தகங்கள், நாளிதழ்கள் படிக்க வசதி செய்யப்பட்டது. கிராம நுாலகங்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் பகுதி நேர பணியில் அமர்த்தப்பட்டனர். கிராம நுாலகங்கள் மக்களுக்கு நன்கு பயன்பட்டு வந்தது. கிராம மாணவர்களும் போட்டி தேர்விற்கு தயார் செய்யும் வகையில் நுாலகங்கள் செயல்பட்டு வந்தன.

கொரோனா காலத்தில் நுாலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதை காரணம் காட்டி நாளிதழ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியாது அவதிப்பட்டனர். தற்போது கட்டுபாடுகள் தளர்வடைந்த நிலையில் நுாலகங்கள் இன்றும் முழுமையாக செயல்படவில்லை. மாவட்ட நிர்வாகமும் இதை திறப்பதற்கு முனைப்பு காட்டவில்லை. பல நுாலகங்களில் பணியில் இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் வழங்காததால் அவர்களும் பணிக்கு வருவதில்லை.

நுாலகத்திற்கு தனியாக கட்டடம், புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் பூட்டியே கிடக்கிறது. அனைத்து நுாலகங்களையும் திறப்பது அவசியமாகிறது......

காட்சி பொருளாய் போச்சு

கிராம நுாலகங்கள் பெரும்பாலானவை பூட்டியே கிடக்கிறது. வயதானர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் நாளிதழ்கள் படிக்க வசதியாக நுாலகங்கள் இருந்தது. கொரோனா பாதிப்பினால் அனைத்தும் நின்று விட்டது. மக்கள் அன்றாட நிகழ்வுகளை நாளிதழ்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியாமல் போகிறது. நுாலகங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனகராஜ், சமூக ஆர்வலர் ,அருப்புக்கோட்டை...............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X