வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் பதிவு செய்யப்படாது செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கபட்டது.
வத்திராயிருப்பு மகாராஜபுரம் ரோட்டில் முத்து என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையை, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்துார் டாக்டர் காளிராஜ், மருந்து ஆய்வாளர் பால்ராஜ் ஆய்வு செய்தனர். மருத்துவமனை பதிவு செய்யப்படாதது கண்டறியப்பட்டு சீல் வைத்தனர். டாக்டர் காளிராஜ்: மருத்துவமனை பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்படாதது கண்டறியப்பட்டதால் சீல் வைக்கப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE