பொது செய்தி

இந்தியா

கம்பளிக்காரன்குப்பம் கிராமத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா

Added : பிப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஏம்பலம் அடுத்த கம்பளிக்காரன்குப்பம் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக சேவை அமைப்பு சார்பில் 'இயற்கை வளங்களை காப்போம்' என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது. செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசன் வரவேற்றார். தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். போட்டியை, துணைத் தலைவர் வினோத்குமார் துவக்கி

புதுச்சேரி : ஏம்பலம் அடுத்த கம்பளிக்காரன்குப்பம் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக சேவை அமைப்பு சார்பில் 'இயற்கை வளங்களை காப்போம்' என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது.

செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசன் வரவேற்றார். தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். போட்டியை, துணைத் தலைவர் வினோத்குமார் துவக்கி வைத்தார். தலைமை ஆலோசகர் ஜானகிராமன், சமூக ஆர்வலர் வேல்முருகன், பொருளாளர் தனவந்தினி, அப்துல் கலாம் அறக்கட்டளை பொறுப்பாளர் சுரேஷ்குமார் வாழ்த்தி பேசினர்.

புதுச்சேரி நலப்பணி சங்க தலைவர் வெற்றிவேல், துணை தாசில்தார் அய்யனார் பங்கேற்று, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். ஏற்பாடுகளை பிரகாஷ், ஆதவன், லலித்குமார் செய்திருந்தனர். செயற்குழு உறுப்பினர் ஞானவேல் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X