செங்குன்றம் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், சாலை ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சென்னை, செங்குன்றம், ஜி.என்.டி., சாலை, சோத்துப்பாக்கம் சாலை, பேருந்து நிலையம், அம்பேத்கர் சாலை ஆகியவற்றில், நடைபாதை கடை மற்றும் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.இதனால், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன.இது குறித்து, நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மேற்கண்ட பிரச்னைக்கு தீர்வு காண, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாதவரம் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மலைச்சாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கனகராஜ், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர், நடைபாதை கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், போக்குவரத்திற்கு இடையூறு இல்லா மல், நடைபாதை கடைகள் வைக்கவும், குறிப்பிட்ட இடத்தில், அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் ஆட்டோக்கள் நிறுத்தவும், சங்கத்தில் இல்லாத ஆட்டோக்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.அப்போது, நாரவாரிக்குப்பம் மற்றும் காமராஜ் நகரை இணைக்கும் சாலை போக்குவரத்துக்கு வசதியாக, பேருந்து நிலையம் எதிரே, ஜி.என்.டி., சாலை தடுப்பை அகற்றி, 'சிக்னல்' அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE