ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒக்கரைபட்டியில் கவரா நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சீனிவாச பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை, சிறப்பு பூஜைகளுக்குப்பின் யாத்ரா தானம், கடம் புறப்பாடுடன் விநாயகர் கோயில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உள்ள சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்கள் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி , பின்னர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.ஏராளமானோர் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை சிவஞான மூர்த்தி, பெரிய தனம் கண்ணன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.-------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE