பெரம்பூர், பிப். 24-பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூரிலிருந்து துவங்கும் பேப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி வரை செல்கிறது. இந்த சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர், பெரியார் நகர், கொளத்துார் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தினசரி இச்சாலையில், 3 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஆனால், சாலை மிகவும் குறுகலாக உள்ளது. 1986ல் இதை, 70 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இதுவரை, சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.தற்போது ஆக்கிரமிப்புகளால், 40 அடிக்கும் குறைவாக சாலை குறுகியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, 2019ல், மாநகராட்சிக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பல ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE