தேனி : தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை 2019-2020 தேர்வில் வெற்றி பெற்ற பி.எட், எம்.எட், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொது செயலாளர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
தலைவர் முருகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் தில்லை கனி, இணை செயலாளர் கனகராஜ், ஹீலர் கார்த்திகா பேசினர். பல்கலை தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் கேடயம், பரிசு வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE