அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பைக் பேரணி வாகன ஓட்டிகள் அவதி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மாதவரம் : தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், மனு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு, இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, கட்சியினர் துண்டு பிரசுரம் அளித்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை, மாதவரம், வி.எஸ்., மணி நகரில், 27ம் தேதி மதியம், 1:00 மணி முதல், 5ம் கட்ட பிரசாரமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களை சந்திக்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கு மக்களை அழைக்க, மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும்,

மாதவரம் : தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், மனு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு, இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, கட்சியினர் துண்டு பிரசுரம் அளித்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை, மாதவரம், வி.எஸ்., மணி நகரில், 27ம் தேதி மதியம், 1:00 மணி முதல், 5ம் கட்ட பிரசாரமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களை சந்திக்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கு மக்களை அழைக்க, மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், சென்னை வடக்கு மா வட்ட தி.மு.க., செயலருமான சுதர்சனம், நேற்று காலை, இரு சக்கர வாகன பேரணி நடத்தினார்.அப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, மனு கொடுக்கலாம் என, துண்டு பிரசுரம் கொடுத்து அழைத்தார்.மாதவரம் மண்டல அலுவலகம் அருகே துவங்கிய பேரணி, காவாங்கரையில் முடிந்தது.மூலக்கடை வரை சென்ற எம்.எல்.ஏ., சுதர்சனம், அங்கிருந்து கிளம்பி சென்றதால், கட்சி நிர்வாகிகள் பேரணியை நடத்தினர்.

இதனால், மாதவரம் பஜார், மூலக்கடை சந்திப்பு, மாத்துார், லட்சுமிபுரம் ஆகிய பகுதி சந்திப்புகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X