மூணாறு : கேரளா மூணாறு அருகே பள்ளிவாசல் பவர்ஹவுஸ்சைச் சேர்ந்தபிளஸ்-2 மாணவி ரேஷ்மா 17, கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டஉறவினர் அருண் 28, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணன்,தங்கை உறவு முறையான இருவரும் காதலித்துள்ளனர். பைசன்வாலி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த ரேஷ்மாபிப்.19 ல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால்வெள்ளத்துாவல் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.அங்குள்ள மூங்கில் காட்டிற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் ரேஷ்மாவை இரவு 9:30 மணிக்கு போலீசார்பார்த்தனர். முன்னர் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில்அருண் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.
தற்கொலை
கொலை நடந்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாகபோலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டபோதும் அருண் குறித்து எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. அவரை தேடினர். அங்கிருந்து 600 மீட்டர் தொலைவில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று அருண் உடல் கிடந்தது. நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அருண் கொலை செய்தார் என்பதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை.கொலை நடந்த பிறகு மூன்று நாட்களாக காட்டிற்குள் மறைந்திருந்த அருணுக்குஉணவு கிடைக்காததால் பலாக்காயைதின்றதற்கானஅடையாளங்கள் காணப்பட்டன.----------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE