சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன ஆக்கிரமிப்பால் கந்தன்சாவடியில் நெரிசல்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கந்தன்சாவடி : கந்தன்சாவடி, கே.பி.கே., நகர் பிரதான சாலை, கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி போயுள்ளது. இதனால், போக்குவரத்து சிக்கலில், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை, கந்தன்சாவடியில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில், ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.அப்பகுதியில், பலநுாறு வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வேளச்சேரி

கந்தன்சாவடி : கந்தன்சாவடி, கே.பி.கே., நகர் பிரதான சாலை, கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கி போயுள்ளது. இதனால், போக்குவரத்து சிக்கலில், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை, கந்தன்சாவடியில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில், ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.அப்பகுதியில், பலநுாறு வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வேளச்சேரி மார்கமாக அங்கு செல்பவர்கள், எம்.ஜி.ஆர்., சாலை வழியாக, கே.பி.கே., நகர் பிரதான சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். நுாறடி அகலம் கொண்ட இச்சாலையை, ஆங்காங்கே ஆக்கிரமித்து, கடை நடத்தி வருகின்றனர். மேலும், சாலையின் இருபுறமும், ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.

சில வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், உட்பகுதியில் வசிப்பவர்கள், நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன், நேரில் ஆய்வு செய்து சாலை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X