பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை கோடவுன்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
போடி : போடியில் அரசுக்கு சொந்தமான இடம் இருந்தும் தோட்டக்கலை துறையில் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வைக்கும் கோடவுன் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.போடி நகராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போடியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். வாழை,

போடி : போடியில் அரசுக்கு சொந்தமான இடம் இருந்தும் தோட்டக்கலை துறையில் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வைக்கும் கோடவுன் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.

போடி நகராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போடியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். வாழை, மிளகாய், காய்கறி, மா, நெல்லி, சம்பங்கி, மல்லி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்க தேவையான உரம், விதைகள், இடுபொருட்கள் வைப்பதற்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான கோடவுன் இல்லை.

இதனால் அருகே தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வாடகை உயர்ந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான இடங்கள் இருந்தும் கோடவுன் அமைக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் அதிகம் செலவாகிறது.தோட்டக்கலைத்துறைக்கு அரசு கட்டடத்தில் கோடவுன் வசதி செய்ய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X