பாகூர் : ஏம்பலம் தொகுதி கிளை இந்திய கம்யூ., சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நாராயணசாமி, பக்தவச்சலம், சுமதி, கிருஷ்ண மூர்த்தி, கணபதி, லெனின், சசிதரன் முன்னிலை வகித்தினர். தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, சேலியமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் மாசிலாமணி சிறப்புரையாற்றினர்.கொம்யூன் பஞ்சாயத்து எல்லையில் தொழிற் சாலைகள், தனியார் தொழில் நிறுவனங்களில் தொகுதியில் தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.
குடியிருப்புபாளையம் - கிருமாம்பாக்கம் சாலையை புதுப்பிக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதியில் கிராமங்களில் கழிவு நீர் வாய்க்கால், சுடுகாடு தகனமேடை அமைக்க வேண்டும். பழுதான ஐமாஸ் விளக்குகளை சீரமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. இது தொடர்பான கோரிக்கை மனு, கொம் யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE