தமிழ்நாடு

வனப்பகுதியில் நீர்த்தேக்க குழிகள்... அமைக்கப்படுமா?வனவிலங்குகள் தாகம் தீர்க்கப்படுமா

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கம்பம் : மாவட்ட வனப்பகுதியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறிப்பாக மான்கள் மனிதர்களை கண்டு பயந்து பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் தண்ணீர்தேக்க குழிகள் அமைத்து நீர்நிரப்பி அவற்றின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.2020 ஐ விட இந்தாண்டு கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக

கம்பம் : மாவட்ட வனப்பகுதியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் குறிப்பாக மான்கள் மனிதர்களை கண்டு பயந்து பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் தண்ணீர்தேக்க குழிகள் அமைத்து நீர்நிரப்பி அவற்றின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020 ஐ விட இந்தாண்டு கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மேற்கு வனச்சரக பகுதிகளில் வாழும் வனவிலங்குகளுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக கோடையில் யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தை மற்றும் புலிகள்அருகில் உள்ள தேக்கடி ஏரிக்கு சென்று விடும். ஆனால் காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற சிறிய விலங்கினங்கள், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ள மலையடிவார கிராமங்களுக்கு வரும். அவ்வாறு வரும் போது, மனிதர்கள் பிடிக்க முயற்சி செய்கின்றனர். அதில் மிரண்டு ஓடும் போது பலியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் கம்பத்தில் மிளா மான் இவ்வாறு பலியானது குறிப்பிடத்தக்கது.

எனவே வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்க தண்ணீர் தேக்க குழிகள் அமைத்து தண்ணீர் ஊற்றி வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் வனவிலங்குகள் இடம் பெயர்வது, மலையடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு வருவது, பலியாவது தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X