பொது செய்தி

தமிழ்நாடு

யோகா பயிற்சி வகுப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கண்ணகிநகர், -கண்ணகிநகரில், அரசு பள்ளி வளாகத்தில், பள்ளி, மாணவ, மாணவியருக்கான, யோகா பயிற்சி துவங்கப்பட்டது. கண்ணகிநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள, பெரும்பாலானோர், கல்வி அறிவு குறைவு. பல்வேறு நடவடிக்கையால், தற்போதுள்ள குழந்தைகள், கல்வியை முழுமையாக கற்று வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக, கண்ணகிநகர், அப்துல்கலாம் மக்கள்

கண்ணகிநகர், -கண்ணகிநகரில், அரசு பள்ளி வளாகத்தில், பள்ளி, மாணவ, மாணவியருக்கான, யோகா பயிற்சி துவங்கப்பட்டது.

கண்ணகிநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள, பெரும்பாலானோர், கல்வி அறிவு குறைவு. பல்வேறு நடவடிக்கையால், தற்போதுள்ள குழந்தைகள், கல்வியை முழுமையாக கற்று வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக, கண்ணகிநகர், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் செயல்படுகிறது. இச்சங்கம் சார்பில், டியூசன், முறைசாரா கல்வி, விளையாட்டு பயிற்சி, தற்காப்பு பயிற்சி நடத்தப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை, சுழற்சி முறையில். டியூசன் நடத்தப் படுகிறது.

இதில், 230க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அரசு துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி வளாகத்தில், டியூசன் நடக்கிறது. பாடம் சொல்லி கொடுக்க, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் என, 27 பேர் உள்ளனர். அனைவரும், இலவசமாக பாடம் சொல்லி கொடுக்கின்றனர். விடுமுறை நாளில், விளையாட்டு மற்றும் தற்காப்பு பயிற்சி நடத்தப்படும். இந்நிலையில், பள்ளி குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்று துவங்கிய பயிற்சியில், 60 பேர் கலந்து கொண்டனர். காலை, 5:30 முதல் 6:30 மணி வரை, யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து, அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் தலைவர் எ.மாரிச்சாமி, 43, கூறியதாவது: பள்ளி கல்வித்துறை அனுமதியுடன், நான்கு ஆண்டுகளாக, டியூசன் நடத்தி வருகிறோம். வறுமை, சூழல் காரணமாக, படிப்பை தொடர முடியாமல், திருமணமான, 35 முதல் 48 வயதுள்ள, நான்கு பெண்கள், 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, மாணவ, மாணவியருக்கு தேவையான படிப்பு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார். மாணவர்களின் அச்சத்தை போக்க, கண்ணகிநகர் காவல் துறையினர், அவர்களுக்கு, தேவையான ஆலோசனை வழங்குகின்றனர். பெற்றோரிடமும் பேசுகின்றனர். கூட்டு முயற்சியால், மாணவ, மாணவியரின் கல்வி, தனித்திறமையை மேம்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X