ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வெளியூர் பஸ்கள் இரவில் வெளியில் நின்று செல்வததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மதுரையில் இருந்து தேனி, கம்பம், போடி செல்லும் பஸ்கள், தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பகல் நேரத்தில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கிறது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இரவிலும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE