பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண கலெக்டர் உத்தரவு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தேனி : பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள்மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தேனி கலெக்டராக பொறுப்பேற்ற கிருஷ்ணனுண்ணி நேற்று தேனி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், போடி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பழனிச்செட்டிபட்டி, வீரபாண்டி, போ. மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிகளில் ஆய்வு செய்தார். பணியாளர் வருகை பதிவு,

தேனி : பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள்மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேனி கலெக்டராக பொறுப்பேற்ற கிருஷ்ணனுண்ணி நேற்று தேனி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், போடி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பழனிச்செட்டிபட்டி, வீரபாண்டி, போ. மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிகளில் ஆய்வு செய்தார். பணியாளர் வருகை பதிவு, தன்பதிவேடு, பணியிடங்கள், காலிப்பணியிட விபரங்களை கேட்டறிந்தார். அரசின் திட்ட பணிகள் விரைந்து செயல்படுத்திட வேண்டும், வளர்ச்சி பணிகள் நடைபெற கலெக்டர் உத்தரவு பெற நீண்டநாள் காத்திருக்க கூடாது.

அதுபோன்ற தகவல்கள் இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நகர், கிராம பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை, அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X