பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவ பட்ட மேற்படிப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தாம்பரம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் விடுபட்ட இரண்டு இடங்களுக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது. சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தேசிய அளவில், 'ஆயுஷ்' மருத்துவத்தை ஊக்குவிக்கும், ஏழு கல்வி நிறுவனங்களில், ஒன்றாக உள்ளது.இந்நிறுவனத்தில் உள்ள, எட்டு வகையான,

தாம்பரம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் விடுபட்ட இரண்டு இடங்களுக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தேசிய அளவில், 'ஆயுஷ்' மருத்துவத்தை ஊக்குவிக்கும், ஏழு கல்வி நிறுவனங்களில், ஒன்றாக உள்ளது.இந்நிறுவனத்தில் உள்ள, எட்டு வகையான, எம்.டி., பட்ட மேற்படிப்புகளுக்கு, கடந்தாண்டு வரை, 46 இடங்கள் இருந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக, மத்திய அரசு, 10 சதவீதம் இடங்களை, இந்தாண்டு கூடுதலாக ஒதுக்கியது. இதனால், நிறுவனத்தின் பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை, 58 ஆக உயர்ந்தது. இதன்படி, அகில இந்திய ஒதுக்கீடு நீங்கலாக, 29 ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங், 2020, டிச., 28ல் நடந்தது.

இதில், நோய் நாடல் மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகிய, இரு பாடப்பிரிவுகளில் தலா, ஒரு இடம் மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. விடுபட்ட அந்த இரு இடங்களுக்கான, கவுன்சிலிங், நாளை, 25ம் தேதி நடைபெற உள்ளது.வகுப்புகள் துவக்கம்!தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள, சித்த மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு தேர்வாகும், முதலாமாண்டு மாணவர் களுக்கான வகுப்புகள், ஆண்டுதோறும் அக்.,1ம் தேதி துவங்கும்.நடப்பாண்டு, கொரோனா காரணமாக வகுப்புகள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்ட நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிறுவன ஒதுக்கீடு ஆகியவற்றில், தேர்வான மாணவர்களுக்கு, வரும், மார்ச்.,1ம் தேதி முதல், வகுப்புகள் துவங்க உள்ளதாக, நிறுவன இயக்குனர், மீனாகுமாரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X