புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை சார்பில், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
முதலியார்பேட்டையில் தபால் நிலையத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் புதுவைத் தமிழ்ச் சங்கப் பாதுகாப்புக் குழு சிறப்புத் தலைவர் அமுதவேந்தன், செயற்குழு உறுப்பினர்கள் மோகன் குமார், குமாரகிருஷ்ணன், திருஞானமூர்த்தி, சிந்தனையாளர் பேரவை தலைவர் செல்வம் பங்கேற்று கவர்னருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினர்.கடிதத்தில், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு தமிழ் தெரிந்தவர்களை கலெக்டராக நியமிக்க வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் மொழியை படித்து, தேர்வில் வெற்றி பெற உத்தரவிட வேண்டும்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும். அரசின் உள் சுற்றுக் கோப்புகள், கடிதங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும். தமிழ் மாமணி, கலை மாமணி விருதுகள், நேரு மற்றும் கம்பன் புகழ் விருதுகள், சிறந்த நுால்களுக்கு பரிசளிக்க வேண்டும். மாநிலத்தில் வெளியாகும் அனைத்து நுால்களையும் நுாலகங்களுக்கு வாங்க வேண்டும். வயதான தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் உள்ளன.சிந்தனையாளர்கள் பேரவை துணைத் தலைவர் பிராங்க்ளின் பிரான்ஸ்வா, பொருளாளர் பைரவி, செயலாளர் சண்முக கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE