பொது செய்தி

தமிழ்நாடு

பிசியோதெரபி சிகிச்சை மேம்படுத்த சர்வதேச சுகாதார கருத்தரங்கம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை : பிசியோதெரபி சிகிச்சையை மேம்படுத்த, சர்வதேச சுகாதார கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவ மாணவர்கள், பிசியோதெரபி டாக்டர்களிடம், சிகிச்சையை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையிலும், சர்வதேச சுகாதார கருத்தரங்கம், ஆன்லைனில், ஒரு வாரம் நடந்தது. இதில், முடநீக்கியல், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபி வல்லுனர்கள் பலர்

சென்னை : பிசியோதெரபி சிகிச்சையை மேம்படுத்த, சர்வதேச சுகாதார கருத்தரங்கம் நடைபெற்றது.

மருத்துவ மாணவர்கள், பிசியோதெரபி டாக்டர்களிடம், சிகிச்சையை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையிலும், சர்வதேச சுகாதார கருத்தரங்கம், ஆன்லைனில், ஒரு வாரம் நடந்தது. இதில், முடநீக்கியல், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபி வல்லுனர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், ரைட் மருத்துவமனை தலைவர் பாலகிருஷ்ணன், பிசியோதெரபி கவுன்சில் தலைவர் முருகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜவகர், பிசியோதெரபி படிக்கும் மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் என, 2,500 பேர் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து, பிசியோதெரபி டாக்டர் கிஷோர் குமார் கூறியதாவது:கருத்தரங்கத்தில், பல்துறையைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்று, தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், பிசியோதெரபி சிகிச்சையில், தற்போதைய மேம்பட்ட சிகிச்சை குறித்து விளக்கப்பட்டது. இந்த கருத்தரங்கம் வாயிலாக, பிசியோதெரபி மாணவர்கள், டாக்டர்கள், புதிய தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை முறையை தெரிந்துகொண்டனர். அவர்கள் வாயிலாக, நோயாளிகளுக்கு, மேம்பட்ட சிகிச்சையை அளிக்க முடியும். இக்கருத்தரங்கம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X